‘ஐ-போன் 15’ சீரிஸ் போன்களை ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் 12ம் தேதி வெளியிட உள்ளது. இவற்றுடன் இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்ச்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள்.. ஐ-போன்-15 தொடர் போன்களை வெளியிடுவதற்கான தருணம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, ஐஓஎஸ் 17 மற்றும் வாட்ச் ஓஎஸ் 10 ஆகியவையும் அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிகிறது.
ஐபோன் 15 சீரிஸ் போன்களின் வெளியீடு செப்டம்பர் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு (இரவு 10.30 மணி IST) கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ‘வொண்டர்லஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போன்கள் ஐபோன் 15 தொடரில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. சார்ஜ் செய்வதற்கு லைட்னிங் போர்ட்டுக்கு பதிலாக USB Type-C சார்ஜிங் போர்ட் தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 15 சீரிஸ் போன்களுடன் இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்ச்களையும் ஆப்பிள் வெளியிடவுள்ளது. அவற்றில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 ஆகியவை அடங்கும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 – ஐந்து வண்ண விருப்பங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
