செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சியால், அவ்வப்போது சில மென்பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.
அந்த வரிசையில் ’’Midjourney’’ உள்ளிட்ட செயலிகள் டிரெண்டாகி வருகின்றன. இவற்றின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும் என்பதால் டிஜிட்டல் ஓவியர்களுக்கு வரப்பிரசாதமாகவும் மாறி உள்ளன.
இந்நிலையில், ஜியோ ஜான் முள்ளூர் என்ற ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் கலைஞர், மகாத்மா காந்தி, நேதாஜி, நேரு, அம்பேத்கர், அன்னை தெரசா, ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங், சேகுவேரா, ஆபிரகாம் லிங்கன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் கார்ல் மார்க்ஸ் போன்ற வரலாற்று ஆளுமைகள் செல்ஃபி எடுக்கும் படங்களை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களின் முழு தொகுப்பையும் இங்கே காணலாம்.
மகாத்மா காந்தி
நேரு
நேதாஜி
அம்பேத்கர்
அன்னை தெரேசா
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்
கார்ல் மார்க்ஸ்
ஆபிரகாம் லிங்கன்
சேகுவேரா
அண்மையில் மாதவ் கோலி என்ற கலைஞர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வரைந்த இந்தியாவின் பழங்கால அரசர்களின் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.