கூகுளில் 2 ஆண்டுகள் பயன்படுத்தப்படாத கணக்குகளை நீக்க முடிவு செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் கூகுள், மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. கூகுளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கணக்குகளை நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலின்படி, ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் என கூகுளின் அனைத்து விதமான கணக்குகளிலும் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட கோப்புகள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த பயன்படுத்தப்படாத கணக்குகள் அனைத்தும் 2023ம் ஆண்டுக்குள் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹேக் உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்கலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.
