தமிழ்நாடு

ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் – கோரிக்கை!!

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2019 மற்றும் 2020ம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, ஆனால் நிரப்பப்படாமல் உள்ளது. புதிய ஆட்சியில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆசிரியர் சங்கத்தினர் எதிர்பார்த்தனர். இந்நிலையில், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தினர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு பல கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், தமிழகத்தில் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த பணியிடங்களுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, விண்ணப்பங்களும் பெறப்பட்டு விட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கலந்தாய்வு நடத்தப்படாமல் உள்ளது. இதனால், பொதுமாறுதல் கலந்தாய்வு மூலம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், அதன் மூலம் ஏற்படும் காலியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அங்கன்வாடி மையத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு ஆசிரியர்களின் உயர்கல்வியை ஏற்பதற்கு அனுமதி தடை செய்யப்பட்டது. இதற்காக ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு கடிதங்களும் பெறப்பட்டது. அதன் பின்னர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: