தமிழ்நாடு

45 வயது கடந்தவர்களுக்கு ஆசிரியர் பணி? பட்டதாரிகள் எதிர்பார்ப்பு!!

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு சேர வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திமுக தேர்தல் வாக்குறுதியின் படி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு நீக்கப்படும் என பட்டதாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு சேர தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை எழுதுவதற்கு வயது வரம்பு எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது. 57 வயதுடையவர்களும் தேர்வு எழுத தகுதி உடையவர்களாக இருந்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு கட்டாயமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொது பிரிவினருக்கு 40 வயதாகவும், மற்றவர்களுக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் வயது வரம்பு கட்டுப்பாட்டில் மாற்றங்கள் ஏதும் அமல்படுத்தப்படவில்லை. அதனை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆசிரியர் பணிக்கு கொண்டு வரப்பட்ட வயது வரம்பு நீக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. தற்போது முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருவதால் இது குறித்த அறிவிப்பை ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியாகாத காரணத்தால் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர்.

இது குறித்து வயது வரம்பு கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என்று கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் டெட் தேர்ச்சி பெற்றும் 40, 45 வயது தாண்டியவர்களால் அரசு பள்ளிகளில் வேலைக்கு செல்ல முடியாத சூழல் நிலவியுள்ளது. அதனால் ஆசிரியர் பணியில் சேரவும், டெட் தேர்வு எழுதவும் விதிக்கப்பட்டுள்ள வயது வரம்பு கட்டுப்பாட்டை தமிழக அரசு நீக்க வேண்டும் . இது குறித்து சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை – அமைச்சர் அறிவிப்பு!!
Back to top button
error: