தமிழ்நாடு

ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் 2021- 2022 ம் கல்வியாண்டிற்கான பிச்டி எம்பில் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 15 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த உயர்கல்வி துறை உத்தரவிட்டது. இதனால் கடந்த ஜூலை 26 ம் தேதி முதல் அனைத்து கலை கல்லூரிகள் மற்றும் பொறியல் கல்லுரிகளில் இணையதளம் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் 2021- 2022 ம் கல்வியாண்டிற்கான பிச்டி எம்பில் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://www.tnteu.ac.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து அதனுடன் கல்வி சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் அம்மன் கோயில் தெரு கார்பாக்கம் சென்னை 60007 என்ற முகவரிக்கு செப்டம்பர் 15 ம் தேதிகுள் அனுப்ப வேண்டும். பிச்டி எம்பில் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்து கூடுதல் விவரங்களுக்கு https://www.tnteu.ac.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: