விளையாட்டுஇந்தியா

TATA IPL 2022: ஐபிஎல்-இன் புதிய டைட்டில் ஸ்பான்சராக டாடா குழுமம் ஒப்பந்தம்!!

T20 கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டியான இந்தியன் பிரீமியர் லீக் (IPL), புதிய டைட்டில் ஸ்பான்சரைப் பெற்றுள்ளது.

சீன மொபைல் நிறுவனமான விவோ டைட்டில் ஸ்பான்சராக இருந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு டாடா குழுமம் ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டாடாவின் இந்த ஒப்பந்தம் எவ்வளவுக்கு செய்யப்பட்டது, அதன் முழு தகவல் குறித்து இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆனால், ஐபிஎல் வரலாற்றைப் பார்த்தால், கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் போட்டியின் பயணம் தற்போது வரை தொடர்கிறது. கடந்த 13 வருடங்களில் ஐபிஎல் மிகவும் வளர்ந்துள்ளது மற்றும் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ளது. ஆரம்பம் முதல் இப்போது வரை ஐபிஎல்லில் பண மழை பெய்து வருகிறது.

ஐபிஎல் வரலாற்றில் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் வழங்கப்படும் ஐந்தாவது அமைப்பாளராக டாடா இருக்கும். இதுவரை ஐபிஎல்லின் பெயர் எப்படி மாறியுள்ளது, ஸ்பான்சர்ஷிப்பிற்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

• ஆண்டுகள் 2008 முதல் 2012 வரை – டிஎல்எஃப் ஐபிஎல் (ஆண்டுக்கு ரூ. 40 கோடி)

• ஆண்டுகள் 2013 முதல் 2015 வரை – பெப்சி ஐபிஎல் (ஆண்டுக்கு ரூ. 79.2 கோடி)

• ஆண்டுகள் 2016 முதல் 2017 வரை – விவோ ஐபிஎல் (ஆண்டுக்கு ரூ. 100 கோடி முதல் 201 வரை)

• விவோ ஐபிஎல் (ஆண்டுக்கு ரூ. 439.8 கோடி)

• ஆண்டு 2020- ட்ரீம் 11 ஐபிஎல் (ரூ. 222 கோடி)

• ஆண்டு 2021- (விவோ ஐபிஎல் ரூ. 439.8 கோடி)

• ஆண்டு 2022- டாடா குழுமம்


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: