இந்தியா

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன ஊழியர்கள் WFH முறையில் பணியை தொடர அனுமதி – CEO தகவல்!!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஊழியர்கள் வரும் நாட்களிலும் WFH முறையில் தங்களது பணிகளை தொடரலாம் என அந்நிறுவனத்தின் CEO தகவல் அளித்துள்ளார். இதன் மூலம் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் உருவான கொரோனா பேரலையால் சில முன்னணி IT நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீடுகளில் இருந்து வேலை செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்தியது. அதன் கீழ் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக ஊழியர்கள் அனைவரும் WHF முறையை பின்பற்றி வருகின்றனர். இதனிடையே கொரோனா 2 ஆம் அலை தொற்று குறைந்து வந்து கொண்டிருக்கும் சூழலில் ஊழியர்களை பணிக்கு வரவழைக்க சில நிறுவனங்கள் திட்டமிட்டது.

ஆனால் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து வீடுகளில் இருந்தபடியே பணியை மேற்கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உருவான கொரோனா தாக்கதினால் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான TCS ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களை அலுவலகத்தில் இருந்து அனுப்பியது. அதே போல மற்ற IT நிறுவனங்களும் தனது 96% ஊழியர்களை WFH முறைக்கு மாற்றியது.

ஆனால் இன்று வரை TCS நிறுவன ஊழியர்கள் WFH முறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இந்நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி என்.கணபதி சுப்பிரமணியம் கூறுகையில், ‘TCS நிறுவனத்தில் WFH செயல்படுத்துவதற்கான முதல் மற்றும் முக்கிய காரணம் என்னவென்றால், நிறுவனத்தை இயக்குவதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். அதே நேரத்தில் WFH முறையில் ஊழியர்களின் உற்பத்தித் திறனை 25% அதிகரிக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த சூழலை பல TCS ஊழியர்கள் தங்கள் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை அடைந்ததாக உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுவாக ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது, இயற்கையாகவே, உற்பத்தி திறன் அதிகரிக்கும். அதே நேரத்தில் உலகெங்கிலும் 500,000 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள IT நிறுவனங்கள், 2025க்குள் அதன் பெரும்பான்மையான பணியாளர்கள் WHF முறையை தேர்வு செய்யலாம் என்று கணித்துள்ளது.

இதையும் படிங்க:  ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவும் டிரோன்கள்.. சுட்டு வீழ்த்த பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: