பொழுதுபோக்கு

டேஸ்ட்டியான தக்காளி ஊறுகாய்!

தக்காளியில் நாம் இப்போது டேஸ்ட்டியான ஊறுகாய் ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தக்காளி – 1 கிலோ,
பூண்டு – 3,
மிளகாய் – 10,
மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்,
நல்லெண்ணெய் – தேவையான அளவு,
கடுகு – 1 ஸ்பூன்,
வெந்தயம் – 1 ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு

செய்முறை

தக்காளி மற்றும் பூண்டை நறுக்கிக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், வெந்தயம், கடுகு போட்டு தாளித்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

அடுத்து பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், பொடித்த தூள் சேர்த்துக் கிளறவும்.
எண்ணெய் பிரிந்துவரும்போது இறக்கினால் சுவையான தக்காளி ஊறுகாய் ரெடி…!!


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  தட்டு இட்லி செய்வது எப்படி..?
Back to top button
error: