தமிழ்நாடுபொழுதுபோக்கு

டேஸ்ட்டியான பன்னீர் சீஸ் பால்ஸ் ரெசிபி..!

பன்னீர் சீஸ் பால்ஸ் பொதுவாக குழந்தைகள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகையாகும். இப்போது அதனை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை :

துருவிய பன்னீர்- 1 கப்
வெங்காயம்- 2
பச்சை மிளகாய்- 3
கொத்தமல்லி இலை- கைப்பிடியளவு
உப்பு- தேவையான அளவு
மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
சாட் மசாலா- 2 ஸ்பூன்
கடலை மாவு- 2 ஸ்பூன்
கான்பிளவர் மாவு – 3 ஸ்பூன்
பிரட் தூள்- கால் கப்
சீஸ்- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் கடலை மாவு போன்றவற்றுடன் தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

பின்னர் பன்னீர் கலவையினை உருண்டையாக உருட்டி நடுவில் சிறிது சீஸ் வைக்கவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் கான்பிளவர் மாவு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

பிறகு பன்னீர் பாலை கான் பிளவரில் போட்டு எடுத்து, பிரட் தூளில் பிரட்டி அரை மணி பிரிட்ஜில் வைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் பன்னீர் சீஸ் பால்ஸ் ரெசிபி ரெடி.

Back to top button
error: Content is protected !!