பொழுதுபோக்குதமிழ்நாடு

டேஸ்ட்டியான பன்னீர் பக்கோடா ரெசிபி..!

பன்னீரில் பொதுவாக குருமா, போண்டா போன்ற ரெசிப்பிகளையே செய்து சாப்பிட்டு இருப்போம். அந்தவகையில் இப்போது பன்னீர் பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • பன்னீர் – 2 கப்
  • கடலை மாவு – 2 கப்
  • மசாலாத்தூள் – 1 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
  • சோள மாவு – 1 ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு,
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், மசாலாத்தூள், உப்பு, தண்ணீர் போன்றவற்றைச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

அடுத்து இந்தக் கலவையில் பன்னீரை நனைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பன்னீரைப் போட்டு பொரித்து எடுத்தால் பன்னீர் பக்கோடா ரெடி.

Back to top button
error: Content is protected !!