பொழுதுபோக்குதமிழ்நாடு

டேஸ்டியான, மொறுமொறு “பாலக்கீரை கட்லெட்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்

நமக்கு மிகவும் இன்றியமையாதது உணவு. மேலும், சத்தான உணவுகளை சாப்பிடுவது மிக அவசியமாகும். அவை சுவையாகவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கீரை வகைகளை தினமும் நம் உணவில் சேர்த்துக்கொள்வது மிக அவசியம். இன்னைக்கு நாம சமைக்க போறது பாலக்கீரை கட்லெட் வாங்க எப்படி சமைக்கலாம்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

palak thing

பாலக்கீரை – 2 கட்டு

உருளைக்கிழங்கு – 2

பச்சை மிளகாய் – 3

இஞ்சி – 1 துண்டு

பிரட் ஸ்லைஸ் – 3

சீஸ் துருவல் – 1/2 கப்

மைதா மாவு – 1/2 கப்

பிரட் தூள் – 1/2 கப்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் கீரையை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்ந்தவுடன் கீரை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கீரை பாதியளவு வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி, அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் மிளகாயை அரைத்து பேஸ்ட் செய்து வைக்கவும்.

palak seimu

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் அரைத்த கீரை, வேகவைத்த உருளைக்கிழங்கு, அரைத்த இஞ்சி, மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலைகள், பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பிழிந்து சேர்க்க வேண்டும் மற்றும் சீஸ் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து தேவையான வடிவத்தில் பிடித்து வேண்டும்.

palak seimurai

மைதா மாவை கட்லெட் செய்ய தேவையான பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். கடாயை காயவைத்து கட்லெட் உருண்டைகளை மைதா மாவு கரைசலில் முக்கி, பிரட் தூளில் பிரட்டி வேக வைக்க வேண்டும். இடைஇடையே தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும். சுவையான பாலக்கீரை கட்லெட் தயார்.

loading...
Back to top button
error: Content is protected !!