தமிழ்நாடு

டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு? அதிகாரி தகவல்!!

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டும் துறைகளில் ஒன்றான டாஸ்மாக் கடைகள் முழு ஊரடங்கு தளர்வில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளதன் அடிப்படையில் மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் மேற்கொள்ளப்படும் சில்லறை மதுபான விற்பனை மூலம் அரசுக்கு போதிய அளவு வருவாய் கிடைத்து வருகிறது. அதாவது மது விற்பனை, ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகள் அனைத்தையும் மூடக்கூடிய சூழல் ஏற்பட்டது.

இதனால் கடந்த நாட்களில் அரசுக்கு 3,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. எனினும் கடந்த 3 வாரங்களாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் செயல்பாட்டிற்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி மீண்டுமாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் மதுபானங்களின் விலை அதிகரிக்கவில்லை.

இதற்கிடையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நேற்று (ஜூலை 15) முதல் மது விலை அதிகரித்துள்ளது. அதனால் தமிழகத்திலும் மது விலை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பேசிய டாஸ்மாக் அதிகாரி ஒருவர், ‘தமிழகத்தின் தற்போதைய சூழலை கவனத்தில் கொள்கையில், மதுபானங்களின் விலையை அதிகரிக்க கூடிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தற்போது மேற்கொண்டுள்ளது. எனவே பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு இந்த விலை உயர்வு அமலுக்கு வரலாம்’ என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: