தமிழ்நாடு

14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – செப்டம்பர் 1 முதல் அமல்!!!

தமிழகத்தில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசின் நிதி நிலைமையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என பல அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் தற்போது செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம் என்றும், அந்த வகையில் 14 சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் எவ்வளவு கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டிவனம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை – பாடலூர் சாலையில் உள்ள திருமாந்துறை, சென்னை – தடா சாலையில் உள்ள நல்லூர், சேலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, சேலம் – குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம், திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி, தஞ்சாவூர் – திருச்சி சாலையில் உள்ள வாழவந்தான் கோட்டை ஆகிய 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: