ஆரோக்கியம்

பல விதமான நோய்களை குணப்படுத்தும் தனியா!

கொத்தமல்லி விதை சமையலில் அதிகமாக பயன்படுத்த கூடிய பொருள். இதனை தனியா என்றும் அழைப்பார்கள். தனியா பல விதமான நோய்களை குணப்படுத்தும் முக்கிய மருந்து. தனியாவில் பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிகளவில் அடங்கியுள்ளது.

அதிக நேரம் கணினிகளில் பணி புரிவோருக்கு கண்கள் எளிதில் பாதிப்படையும். இதற்கு மல்லி விதையை நீரில் கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் புத்துணர்வு பெறும்.

மல்லி விதையை வாயில் வைத்து மென்று உமிழ்நீரை இறக்கினால் சில நேரங்களில் பல் இடுக்குகளில் உள்ள கிருமிகளாலும், குடல் அல்லது வயிற்றுப் புண்களாலும் வர கூடிய வாய் துர்நாற்றம் நீங்கும்.

இதய நோய்கள் ஏற்படாமல் இருக்க அடிக்கடி உணவில் மல்லியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு அடிக்கடி புளித்த ஏப்பம் ஏற்படும். இந்த புளித்த ஏப்பத்தை போக்க தனியாவுடன் சிறிது சோம்பு சேர்த்து சாப்பிட்டால் குணமடையும்.

மல்லி விதை பொடியை தொடர்ந்து உபயோகப்படுத்தும் போது எளிதில் ஜீரணமாகாத உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணமடைய செய்யும்.

ஜலதோஷம் ஏற்பட்டாலே தலைவலி ஏற்படும். இவர்கள் மல்லி விதையை அரைத்து நெற்றியில் ஒத்தல் போட்டால் தலைவலி, மூக்கடைப்பு குணமாகும். மேலும் பித்தத் தலைவலி உள்ளவர்கள் சந்தனத்துடன் மல்லியை அரைத்து ஒத்தல் கொடுத்தால் பித்தம் தணிந்து தலைவலி குணமாகும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: