சென்னை மெட்ரோ ரயில் சேவையை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வார இறுதி மற்றும் பண்டிகை தினங்களில் இந்த மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த அதிக பயணிகள் வருகை தருவதால், இது போன்ற நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. டிக்கெட் கவுண்டர் போன்ற இடங்களில் கூட்டம் நிரம்பி வழிவதால் இதற்கு மாற்று ஏற்பாடாக, மெட்ரோ நிர்வாகம் இ டிக்கெட் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
பயணிகள் தங்கள் வாட்ஸ் அப்பில் இருந்து, குறிப்பிட்ட எண்ணுக்கு ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு, பயணம் செய்வதற்கான இடங்கள் வாட்ஸ் அப்பில் காட்டப்படும். அதில் தேவைப்படும் இடங்களை, பயணிகள் தேர்வு செய்து கட்டண நுழைவு வாயிலுக்கு சென்று, டிக்கெட் கான கட்டணத்தை செலுத்தி இ டிக்கெட்டை தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதனால் பயணிகள் டிக்கெட் காக நீண்ட நேரம் வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும். அதுமட்டுமில்லாமல் ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்பே இந்த டிக்கெட்டை ஈசியாக மொபைலில் இருந்து வாங்கிவிடலாம்.
