துணிவு, வாரிசு திரைப்படங்களுக்கு திருநெல்வேலியில் உள்ள திரையரங்கில் தலா 100 அடிக்கு போட்டி போட்டு ரசிகர்கள் கட்டவுட் அமைத்துள்ளனர். விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு படம் வருகிற 11ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் நெல்லை சந்திப்பு உடையார் பட்டியில் உள்ள திரையரங்கு ஒன்றில், விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் போட்டி போட்டு 100 அடி உயரத்தில் அவர்களுக்கு கட் அவுட் வைத்துள்ளனர்.
மேலும் திரையரங்குகளில் துணிவு படத்திற்கான நள்ளிரவு ரசிகர் காட்சிகளுக்கும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கான அதிகாலை 4 மணி காட்சிகளுக்கும் இன்று காலை 11 மணியிலிருந்து டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது.