Thursday, December 7, 2023
Homeதமிழ்நாடுநெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வரும் 24-ம் தேதி முதல் இயக்கம்!!
- Advertisment -

நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வரும் 24-ம் தேதி முதல் இயக்கம்!!

- Advertisement -

நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வருகிற 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் என்று தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்தார்.

இந்திய ரயில்வே சார்பில் அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முதலாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னை – கோவை இடையே அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க தேவையான நடவடிக்கைகளை ரயில்வே துறையினர் மேற்கொண்டனர்.

- Advertisement -

இதற்காக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்க தேவையான முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட பிட்லைன் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தின நாளில் வந்தே பாரத் ரெயில் இயக்கம் தொடங்கும் என தகவல் பரவிய நிலையில் அது தள்ளிப் போனது.

தொடர்ந்து கடந்த வாரம் நெல்லை – சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலுக்கு வண்டி எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நெல்லை – சென்னை எழும்பூர் ரயிலுக்கு 20632 என்ற எண்ணும், சென்னை-நெல்லை ரயிலுக்கு 20631 என்ற எண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் வருகிற 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. நெல்லை ரயில் நிலையத்தில் தொடக்க விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

- Advertisement -

பிரதமர் மோடி வருகிற 24-ம் தேதி மான் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதில் தென்னக ரயில்வே கோட்டத்தில் காசர்கோடு – திருவனந்தபுரம், சென்னை – விஜயவாடா, நெல்லை – சென்னை ஆகிய 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதற்கான தொடக்க விழா நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறுகிறது. நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் முதல் கட்டமாக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களில் நின்று செல்லும். மேலும் சில இடங்களில் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை வைத்துள்ளர். அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + one =

- Advertisment -

Recent Posts

error: