News

News

Wednesday
June, 7 2023

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – ஜனவரி 8ம் தேதி போக்குவரத்து மாற்றம்!!

- Advertisement -

தமிழகத்தில் அவ்வப்போது ஒரு சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மாரத்தான் போட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள், சாலை மராமத்து பணிகள், போராட்டம் போன்றவை நிகழும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரங்கள் சாலைகள் ஸ்தம்பித்து விடும். இதனை தவிர்ப்பதற்காக போக்குவரத்து காவல் துறையினர் சாலை போக்குவரத்தில் முக்கிய சில மாற்றங்களை அறிவிப்பார்கள்.

Also Read:  தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

அவ்வாறு, தற்போது ஜனவரி 8ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று சென்னை Runners மாரத்தான் நெடுந்தூர ஓட்டம் அதிகாலை 4 மணிக்கு நேப்பியர் பாலத்தில் தொடங்கி, 9 மணிக்கு இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தில் முடிவடைகிறது. இதனால், சென்னை மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் தாம்பரம் போக்குவரத்து காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளார்.

Also Read:  தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

அதன்படி, சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து துரைப்பாக்கம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் இடது புறம் திரும்பி செம்மொழி சாலை வழியாக செல்ல வேண்டும்.

ராஜீவ் நகர் சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வலதுபுற சாலையில் செல்ல வேண்டும்.

Also Read:  நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வௌியாக வாய்ப்பு

மேடவாக்கம் வழியாக சோழிங்கநல்லூர் செல்லும் அனைத்து வாகனங்களும் வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை வழியாக செல்ல வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Stay in the Loop

Get the daily email from dailytamilnadu that makes reading the news actually enjoyable. Join our mailing list to stay in the loop to stay informed, for free.

Latest stories

- Advertisement -

You might also like...

       
error: