குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, நாளை (மார்ச் 18) கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம், விவேகானந்தா கேந்திரியா ஆகிய இடங்களை பார்வையிடுகிறார்.
இதையடுத்து இந்நிகழ்ச்சிகள் முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுவுள்ளது.
மேலும், நாளை கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு வர சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
