தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகளை சுற்றுலா தளங்களில் சிறப்பிக்கவே பெரும்பாலான மாணவர்கள் விரும்புகின்றனர். இதன் காரணமாக ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தளங்களில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது.
அதிலும் மலைகளின் அரசியான ஊட்டியில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி என பல்வேறு கண்காட்சிகளை பார்ப்பதற்கு ஏராளமானோர் வருகை புரிவார்கள். அந்த வகையில் ஊட்டியில் இந்த ஆண்டு மலர் கண்காட்சி நாளை (மே 19) முதல் மே 23ம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்த மலர் கண்காட்சியை ஊட்டி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மக்களும் கண்டு ரசிக்கும் படி நாளை (மே 19) நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளனர்.
