தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தினமும் ஏகப்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய இந்த கோவிலுக்கு வருவார்கள். இந்த திருக்கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பின் நாளை ( ஜன 27) குடமுழுக்கு நடத்தப்பட இருக்கிறது. அதன் பின் தைப்பூச திருவிழாவும் நடைபெற இருக்கிறது. தற்போது பழனியில் குடமுழுக்கு விழாவிற்கான பணிகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது
குடமுழுக்கு விழா நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வண்ணம் ராஜகோபுரம் உள்பட கோவில் வளாகம் முழுவதும் மலர் தூவ, பெங்களூருவில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நாளை (ஜன 27) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
- Advertisement -
அதனால் நாளை ஒரு நாள் பள்ளி கல்லூரிகள் இயங்காது எனவும், அரசு அலுவலகங்களும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 16 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு விழா நடைபெறுவதால், அன்றைய தினம் இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பழனி நகராட்சி ஆணையர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.