தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் வரும் 1ம் தேதி முதல் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்கிறது.
தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதம் என 2 முறை சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு தேர்தல் காரணமாக ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதற்கு மாறாக, ஜூன் மாதத்தில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில், மீதமுள்ள 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், இந்த சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் ஏற்கனவே உள்ள கட்டணத்தை விட கூடுதலாக 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.