தமிழகத்தில் புதிதாக 3 இடங்களில் சுங்கச்சாவடிகள் – தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த அறிவிப்பின்படி,
விழுப்புரம் மாவட்டத்தில் நங்கிளி கொண்டானில் புதிய சுங்கச்சாவடி திறக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரியமங்கலத்தில் புதிய சுங்கச்சாவடி அமைகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டியில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்படவுள்ளது.
கரியமங்கலம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 55 ரூபாய் முதல் 370 ரூபாய் வரையும், நங்கிளி கொண்டான் மற்றும் நாகம்பட்டியில் வாகனங்களுக்கு 60 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.