தமிழகத்தில் ரூ.1,000 பொங்கல் பரிசுக்கான டோக்கன் பணிகள் தொடக்கம்!!

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரூ.1000 ரொக்க தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது.

பெரும்பான்மையான மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு 2024 பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்குவதற்கு அறிவித்திருந்தது.

 

அரசு அறிவிப்பின்படி, தமிழகத்தில் மொத்தம் 2 கோடி 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்கள் இந்த பொங்கல் பரிசினை பெற்று பயனடைய முடியும். ஜனவரி 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கும் என்று அரசு முன்னதாக அறிவித்திருந்தது.

அதன்படி, நேற்று கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரடியாக மக்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன்களை வழங்கியுள்ளனர். டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நேரம் மற்றும் தேதிகளில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஜனவரி 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
Exit mobile version