- Advertisement -
சமீப காலமாக தங்கம் விலை திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து, ரூ.41,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 23 ரூபாய் குறைந்து ரூ.5,237 ஆக விற்பனை செய்யப்படுகிறது, அதன் படி 8 கிராம் ஆபரணத் தங்கம் 41,896 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 காசுகள் குறைந்து ரூ.73.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Advertisement -