பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன.
ஒன்றிய அரசு கடந்த 2022 ஆண்டு மே 21 தேதி அன்று பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைத்தது.
இதன்படி சென்னையில் இன்று (ஜூன் 07) 382வது நாளாக பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகிறது.
