அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிளுக்கு மாதம் தோறும் ரூ.1000 அளிக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்து இருந்தது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடந்த ஜூன் 30 ஆம் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தச் சூழலில் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அந்த வகையில், இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவிகள் www.penkalvi.gov.in என்ற இணையதளத்தில் மாணவிகள் தங்கள் விவகாரங்கள் பதிவேற்ற வேண்டும். இந்த கல்வி உதவித் தொகை திட்டம் தொடர்பான தகவல்களைக் கட்டணமில்லா 14417 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh