20230111 084953

தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தியாகராஜர் ஆராதனை விழா இன்று (ஐனவரி 11) காலை 7.45க்கு தொடங்குகிறது.

இவ்விழாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார். தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.