பகவதி அம்மன்

குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்திற்கு இன்று (மார்ச் 14) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.