தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு முன்னதாக கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடுமையான சிரமங்களை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்து ஆறுதல் அளித்து வருகிறது. இதையடுத்து இந்த மழைப்பொழிவு குறித்த முக்கிய தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் வருகிற மார்ச் 23ம் தேதி வரை மிதமான முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களிலும், நாளை (மார்ச் 21) காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கோடை வெயிலை தணிக்க வந்த இந்த மழைப்பொழிவு அடுத்த 3 நாட்களுக்கு நீடிக்க உள்ளதால் பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.