temple tn

மாசி மாத பௌர்ணமி.. சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!

மாசி மாத பௌர்ணமியையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி சுயம்பு வடிவமாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளிக்கிறது.

இந்த நிலையில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதை வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.