ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்க்கவோ நீக்கவோ.. இவைதான் வழிமுறைகள்!

 

தமிழகத்தில் உள்ள ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கார்டு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் உணவுப் பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதன்படி, குடும்ப உறுப்பினர் ஒருவர் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ, குடும்பத்தில் புதிதாக ஒருவர் சேர்க்கப்பட்டாலோ, அதனை ரேஷன் கார்டில் புதுப்பிக்க வேண்டும்.

அதற்கு, முதலில் https://www.tnpds.gov.in/ என்கிற மாநில உணவு விநியோகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று புதிய உறுப்பினரை சேர்ப்பதற்கான விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர், உறுப்பினரின் பெயர் நீக்கம் அல்லது சேர்த்தல் குறித்த தகவலை தெரிவித்து அதற்கான ஆவணங்களையும் இணையதளத்தில் இணைக்க வேண்டும்.

 

இவ்வாறு, இணையதளத்தில் பதிவு செய்தவுடன் உங்களுக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப்படும். இதன் பின்னர் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டு ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் மற்றும் சேர்த்தல் செய்யப்படும்.

 
 
Exit mobile version