தமிழகத்தில் இந்த 10 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை – வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தின் உள்மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் இயல்பை விட 3 முதல் 4.6 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பம் இயல்பை விட அதிகமாக இருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மற்றும் தருமபுரி மாவட்டங்களில் வெப்ப அலை வீசியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 10 இடங்களில் அதிகபட்சமாக 40-42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதன்படி, திருப்பத்தூர் மற்றும் சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ், வேலூரில் 41.3 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தர்மபுரி மற்றும் திருச்சியில் 40.7 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 40.4 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர், கரூர் பரமத்தியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

 
 
Exit mobile version