
தைப்பொங்கல் திருநாளான இன்று (ஜனவரி 14) உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீரர்களின் உறுதிமொழியுடன் போட்டி தொடங்கியது. இதில் 1,100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் களம் காண்கின்றனர்.
வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இப்போட்டியை காண ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.