8ம் தேதி வரை இயல்பை விட வெப்பம் 5 டிகிரி அதிகரிக்கும் – வானிலை மையம் அலர்ட்..!

 

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், வெப்பநிலை இப்போதே 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது. கோடையில் வெப்பத்தை தணிக்க பல இடங்களில் மழை பெய்தாலும் சில நிமிடங்கள் மட்டுமே நீடித்து மக்களை ஏமாற்றமடையச் செய்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வரும் 8ம் தேதி வரை இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Summers in Chennai heat

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்களில் 106 டிகிரியும், உள்மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 102 டிகிரியும், கடலோரப் பகுதிகளில் 99 டிகிரியும் வெப்பநிலை இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

 
 
 
Exit mobile version