தமிழகத்தில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கக் கூடாது என்றும், பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh