தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில், ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 22-ம் தேதி முதல் தொடங்கியது. விண்ணப்பப்பதிவு செய்ய கடந்த மாதம் 27-ம் தேதி கடைசி நாளாக இருந்தது. மொத்தமுள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் பதிவானது.
இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 5 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh