தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் சில மாதங்களாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் சில மாதங்களாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 3000 ஆயிரத்தை நெருங்குகிறது. சென்னையில் மட்டும் 1000க்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து பாதுகாக்க பொது இடங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்காதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேகமெடுத்து வரும் கொரோனா பாதிப்பு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த இருப்பதாக முதல்வர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து நடந்து முடிந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் முதற்கட்டமாக கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தடுப்பது, அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh