விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினத்தையொட்டி மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகையின் விலை ரூ. 600 ஆக இருந்தது, நேற்று 1500 முதல் 1800 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது.
இதுதவிர ரூ.400க்கு விற்ற பிச்சிப்பூ ரூ.800க்கும், ரூ.150க்கு விற்ற அரளிப்பூ ரூ.200க்கும், ரூ.400க்கு விற்ற முல்லைப்பூ ரூ.800க்கும் விற்பனையானது.
இதேபோல், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. பூக்களை அடுத்து காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதிக விலை இருந்தபோதிலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
