26.1 C
Chennai

பூக்களின் விலை கடுமையாக உயர்வு

- Advertisement -

பொங்கல் பண்டிகை மற்றும் மகரஜோதி விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அங்குள்ள மலர்ச் சந்தையில் மல்லிகைப்பூ இன்று கிலோ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், நேற்று 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று 3 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி நாளை கொண்டாடப்பட உள்ள சூழலில், அதனையொட்டி அமைந்திருக்கும் தென்காசி மாவட்டத்தில் பூக்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாகவும் அதுவே விலை உயர்வுக்கு காரணம் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

Read More

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + three =

error: