கடந்த ஒரு சில நாட்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனை கவனத்தில் கொண்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே போல, மதுரையில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கடலூரில் 6 பேரும், புதுக்கோட்டையில் 5 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
