அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. அதே சமயம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டனர். இதனால், அப்பகுதியே போர் களம் போல காணப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை நீதிபதி என்.சதீஷ்குமார் கடந்த வாரம் விசாரித்தார். பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh