தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார்.
இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி உள்ளதாக தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலின்படி,
- தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் – 6,20,41,179 பேர்
- ஆண் வாக்காளர்கள் – 3,04,89,066 பேர்
- பெண் வாக்காளர்கள் – 3,15,43,286 பேர்
- மூன்றாம் பாலினித்தவர் – 8027 பேர்
- வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் – 3,310 பேர்
- 18,19 வயதுக்குட்பட்டவர்கள் – 4,66,374 பேர்
மாவட்ட வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விபரம்
வாக்காளர்கள் தங்களின் விவரங்களை சரிபார்க்க http://elections.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
