medicine

இந்த குறிப்பிட்ட மருந்து விற்பனைக்கு தமிழகத்தில் தடை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த விளக்கம்!!

இந்தியாவில் பல்வேறு இடங்களில் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்பட்டு சர்வதேச நாடுகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதில் சென்னையில் தனியார் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் 50 க்கும் மேற்பட்டோர் பார்வை இழந்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் அண்மையில் தகவல் வெளியானது. இதனால் அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் மருந்துகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.

ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளால் காம்பியா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.

இதனால் இந்நிறுவனங்களின் மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து சென்னை நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி கலையரங்கம் திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், “தீங்கு விளைவிக்கக்கூடிய மருந்துகளையே வெளிநாடுகளில் தடை செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் தமிழகத்திலும் பின்பற்றப்பட்டு வருகிறது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.