கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட வெளியூரில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
