சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்

 

சபரிமலைக்கு நாளை (நவம்பர் 16) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி வரை தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஐய்யப்பன் கோவில் நடை, கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி, மண்டல பூஜை காலம் வரை தொடர்ந்து 41 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். மார்கழி மற்றும் தை மாதத்தில் மகர விளக்கு பூஜைக்காக கோவில் மண்டபம் திறக்கப்படும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி கார்த்திகை மாதம் முதல் நாள் வருவதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 27ஆம் வரை மண்டல பூஜைகள் நடைபெற்று மூடப்படுகிறது. பின்னர் டிசம்பர் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 2024 ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு தரிசனமும், தொடர்ந்து படி பூஜைகளும் நடைபெறுகிறது.

 

இந்நிலையில் சபரிமலைக்கு நாளை (நவம்பர் 16) முதல் ஜனவரி 16ம் தேதி வரை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

 
 
Exit mobile version