வரலாற்றில் இல்லாத அளவிற்கு நேற்று (மார்ச் 18) தங்கம் விலை உயர்ந்து மக்களை அதிர்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், தங்கம் விலை மேலும் அதிகரிக்கலாம், ஒரு சவரன் தங்கம் ரூ.50,000-ஐ தொடும் என நகை விற்பனையாளர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவதுமே இதற்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.