கொரோனா காலங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசு ஊரடங்கு பிறப்பித்ததால் வகுப்பு மற்றும் தேர்வுகளை ஆன்லைனில் மேற்கொண்டு வந்தனர். கடந்த ஆண்டு முதல் தடைகள் நீங்கி வழக்கமான முறையில் பள்ளிக்கு சென்று மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
அண்மையில் 10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்துள்ளதால் இன்று முதல் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2 ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும் ஜனவரி 4ம் தேதி வரை தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற உள்ளதால் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவமணிகளுக்கு ஜனவரி 5ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.