தமிழ்நாடுமாவட்டம்

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மார்ச் 4ம் தேதி வெளியிட்ட திருத்தி அமைக்கப்பட்ட 2024ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவுகளுக்கு தனித்தனியே முதன்மை தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 10 அலகுகளை கொண்ட புதிய பாடத்திட்டத்தில் தமிழகத்தின் நிர்வாகமும் வளர்ச்சியும் என்ற புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 30 பணி இடங்களை நிரப்ப குரூப் 2, 2ஏ பணிகளுக்கான தேர்வு, வரும் செப்டம்பர் மாதம் 28ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirty five − thirty four =

Back to top button
error: